போர் நிறுத்த முடிவு... பாகிஸ்தான் மீது சீனாவிற்கு அதிருப்தியா? வெளிவரும் பின்னணி
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னனியில் அமெரிக்கா இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கூரிவரும் நிலையில், அதன் பின்னணி தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
உலக அமைதிக்கான தூதராக
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் குறித்து நான்கு நாடுகள் சம்பவத்தன்று அறிக்கை வெளியிட்டன. அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, அதன் பின்னர் கடைசியாக சீனாவும் இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டது.
இந்த நான்கு நாடுகளும் போர் நிறுத்தம் தொடர்பில் வெவ்வேறு கருத்துக்களை பதிவு செய்திருந்தது. மறுக்க முடியாத உண்மை என்பது பாகிஸ்தானின் இராணுவ செயற்பாடு அதிகாரி அல்லது DGMO தனது இந்திய சகாவை அழைத்து, உடனடி போர் நிறுத்தம் தேவை என்று கோரிக்கை வைத்ததாக இந்தியா தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் இதில் தங்கள் பங்களிப்பை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் உலக அமைதிக்கான தூதராக தன்னைக் காட்டிக் கொள்ளும் டொனால்ட் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு காரணம் அவரது நிர்வாகம்தான் என்ற வியத்தகு அறிவிப்பை முதலில் வெளியிட்டார்.
ஆனால் இதை இந்தியா தரப்பு மறுத்து வருகிறது. உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததன் பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னரே இந்தியா அறிவித்துள்ளது.
சீனாவே காரணம்
இதனிடையே, அமெரிக்காவின் முடிவுக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவித்ததை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவை தனிமைப்படுத்தும் விதமாக ட்ரம்ப் முந்திக்கொண்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல்களின் அடிப்படையில், நெருக்கடி மற்றும் துயரத்தின் போது சீனாவை தொடர்புகொள்வதற்குப் பதிலாக அமெரிக்காவை அணுகியதற்காக பாகிஸ்தான் மீது சீனா வருத்தமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, சீனா பாகிஸ்தானை தொடர்புகொண்ட அதே வேளை இந்தியாவையும் தொடர்புகொண்டுள்ளது. அத்துடன், போர்நிறுத்தம் ஏற்பட்டதற்கு சீனாவே காரணம் என குறிப்பிட்டுள்ளதுடன்,
பாகிஸ்தானின் இஷாக் தார் மற்றும் இந்தியாவின் அஜித் தோவல் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள்தான் இறுதியில் பதற்றத்தைக் குறைத்து முழுமையான, நீடித்த போர்நிறுத்தத்தைக் கொண்டுவர உதவியது என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி கூறியிருந்தார்.
மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரும் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பதை சமூக ஊடகத்தில் உறுதி செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |