அமெரிக்காவை எதிர்க்க பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டணியை நாடும் சீனா
சீனா அதன் பன்முக வர்த்தகத்தை பாதுகாக்க பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டணியை நாடியுள்ளது.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அதிக வரிவிதிப்புகளை எதிர்த்து, பன்முக வர்த்தக அமைப்புகளை பாதுகாக்க பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவையை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியுடன் நடந்த தொலைபேசி உரையாடலில், “அமெரிக்கா பன்முக வர்த்தக ஒழுங்குமுறைகளை மீறி, தன்னிச்சையான வரிவிதிப்புகள் மூலம் உலக வர்த்தகத்தை பாதிக்கிறது” எனவும், “சீனா மற்றும் பிரித்தானியா ஆகியவை சர்வதேச ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை பின்பற்ற வேண்டும்” என்றும் வாங் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சர் பீட்டே மெய்னல்-ரைசிங்கருடன் உரையாடிய வாங், ஐரோப்பிய ஒன்றியம் பன்முக வர்த்தகத்தை உறுதியாக பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பல்தரப்பட்ட பொருளாதார குழுக்களை உருவாக்கி, மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் உற்பத்திகளுக்கான சந்தை அணுகல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார அம்சங்களில் ஒத்துழைப்பு வளர்த்துவருகிறது.
முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங், ஸ்பெயின் பிரதமர் சாஞ்சஸுடன் சந்தித்து, உலகமயமாக்கலை பாதுகாக்க ஐரோப்பா ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China US trade war 2025, China EU trade relations, Wang Yi UK EU phone call, US China tariffs news, multilateral trading system China, global trade war update, UK EU China trade cooperation, WTO rules US tariff violations, electric vehicle tariff China EU, international trade news today