இந்திய பயணிகளுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை மாற்றிய சீனா
China Visa Rules Updated for Indians 2026: இந்திய பயணிகளுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை சீனா மாற்றியமைத்துள்ளது.
சீன விசா விண்ணப்ப முறையில் மாற்றம்
சீன அரசு இந்தியர்களுக்கான விசா விண்ணப்ப முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. அக்டோபர் 26, 2026 முதல், மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி விசா மையங்கள் புதிய விண்ணப்பங்களை ஏற்காது. இதற்கு பதிலாக, சீன தூதரகங்கள் நேரடியாக விண்ணப்பங்களை பரிசீலித்து செயல்படுத்தும்.

முன்பு, VFS போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இந்த செயல்முறையை மேற்கொண்டன. ஆனால் இனி, விண்ணப்பதாரர்கள் முதலில் சீன தூதரகத்தின் இணையதளத்தில் ஓன்லைன் ஆவண பரிசீலனைக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஓன்லைன் அனுமதி கிடைத்த பின், 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட், தேவையான ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் (2 வெற்று பக்கங்கள் அவசியம்)
சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு வண்ணப் புகைப்படங்கள்
கடந்த 5 ஆண்டுகளின் பழைய பாஸ்போர்ட்கள்
இந்தியா அல்லாத குடிமக்களுக்கு செல்லுபடியாகும் இந்திய விசா/வசிப்புச் சான்று
சிறார்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாதுகாவலரின் அடையாள ஆவணங்கள்
சுற்றுலா (L category) விசா பெற விரும்புவோர், கடந்த 6 மாதங்களுக்கான வங்கி சேமிப்பு கணக்கு அறிக்கையில் மாத சராசரி ரூ.1,00,000 இருப்பு இருக்க வேண்டும் அல்லது அதே அளவு வைப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப இடங்கள்:
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில மக்கள் மும்பை தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பிற மாநில மக்கள் தற்காலிகமாக டெல்லி தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய விசா கட்டணங்கள்:
ஒற்றை நுழைவு: ரூ.2,900
இரட்டை நுழைவு: ரூ.4,400 6
மாத பல நுழைவு: ரூ.5,900
1 ஆண்டு அல்லது அதற்கு மேல் பல நுழைவு: ரூ.8,800.
இந்த மாற்றங்கள், சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு விண்ணப்ப முறையை எளிமைப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |