தலாய் லாமா விவகாரத்தில் தலையிடக் கூடாது: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா
தலாய் லாமா தேர்வில் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
தலாய் லாமாவின் வாரிசு தேர்வில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் அது சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
திபெத் விவகாரத்தை முன்னிறுத்தி தலாய் லாமா விவகாரத்தில் இந்தியா தலையீட்டால் இந்தியா சீனா இடையிலான இருதரப்பு உறவு மேலும் சீர்குலையும் என்றும், உறவு முள்வேலி பிரச்சினையாக மாறும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் இந்தியாவிற்கான சீன தூதர் யூ ஜிங் வெளியிட்ட பதிவில், தலாய் லாமாவின் மறுபிறவி பல நூற்றாண்டுகளாக சீன மத்திய அரசின் ஒப்புதலை கோரும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருவதாகவும், தற்போது 14வது தலாய் லாமாவும் அதன்படியே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தலாய் லாமாவின் மறுபிறவி விவகாரம் முழுக்க முழுக்க சீனாவின் உள்நாட்டு விவகாரம் இதில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக் கூடாது.
மத்திய திபெத்திய நிர்வாகம் என்ற அமைப்பை எந்தவொரு இறையாண்மை கொண்ட நாடுகளும் அங்கீகரிக்க வில்லை என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு
அத்துடன் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து கூறியுள்ள அவர், திபெத் விவகாரத்தில் சீனா தெளிவான உறுதிமொழியை வழங்கி இருப்பதாகவும், அதை இந்தியா தொடர்ந்து மதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் திபெத்திய சுதந்திரத்தை கோரும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இந்தியா தனது தளத்தை வழங்காது என்றும், தலாய் லாமா நியமன விவகாரத்தில் தலையீடாது என்று மனப்பூர்வமாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
14வது தலாய் லாமா-வாக டென்சின் கியாட்சோ உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |