தீயுடன் விளையாட வேண்டாம்! அமெரிக்காவை நேரடியாக எச்சரித்த சீன ஜனாதிபதி
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை குறிப்பிட்டு தீயுடன் விளையாட வேண்டாம் என சீனா எச்சரித்துள்ளது.
ஆசிய நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் தான் என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தாங்கள் தனி பிராந்தியம் தான் என தைவான் கூறி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா தனது ஆதரவை தைவானுக்கு தெரிவித்து வருகிறது. தைவான் மீதான பதட்டங்களை குறைக்க சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசி உரையாடல்களை முன்னெடுத்து வருகிறது.
இதுவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங் இருவரும் தொலைபேசி வாயிலாக நான்கு முறை உரையாடியுள்ளனர். இந்த நிலையில் ஐந்தாவது முறையாக தலைவர்களின் உரையாடல் தொலைபேசி வாயிலாக நடந்தது.
அப்போது, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு தங்களுக்கு விரும்பத்தகாத வகையில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தலையிடுவது தீயுடன் விளையாடுவது போன்றது எனவும் ஜி ஜிங் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
THOMAS PETER/AFP/Getty Images
மேலும், இரண்டு மணிநேரம் நடந்த இந்த உரையாடலில் இரு நாடுகளின் தலைவர்களும் காலநிலை மாற்றம், சுகாதார பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை மேற்கோளிட்டுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர், இரு நாடுகளுக்கு இடையேயான பெரிய பொருளாதார ஒருங்கிணைப்பில் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
etonline