சீன படைகளின் தயாரிப்புகளை அதிகப்படுத்துங்கள்: ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிரடி உத்தரவு
உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருகிறது.
சீனாவின் பாதுகாப்பு சூழ்நிலையில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் ஆயுதப்படை பயிற்சி மற்றும் தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என செவ்வாயன்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகமான மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டுப் பணியாளர்கள் துறையை பார்வையிட்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருவதாக தனது உரையில் குறிப்பிட்டார்.
REUTERS
அத்துடன் சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் சீனாவின் பாதுகாப்பு சூழ்நிலையில், உறுதியற்ற தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மையை தூண்டியுள்ளது.
அதனால் தான் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் தனது புதிய தசாப்தத்தில் உள்ள பணிகளை நிறைவேற்ற வேண்டும் மற்றும் கட்டளைகள் மற்றும் செயல்பாட்டில் புதிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்ததாக அந்த நாட்டின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: மாதந்தோறும் 41 லட்சம்...இந்திய இளைஞர்களுக்கு வாரி வழங்க தயாரான சமூக ஊடகம்
REUTERS/China Daily
ரஷ்யா-உக்ரைன் போர், சீனா- தைவான் இடையிலான பதற்றம் ஆகியவற்றில் சீனாவின் நிலைப்பாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக இருப்பதாலும், வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் சீனா முதன்மை இருப்பதாலும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.