சீன பாதுகாப்பு அமைச்சர் எங்கே? பொதுவெளியில் தென்படாததால் ஜி ஜின்பிங் நோக்கி எழுந்த கேள்விகள்
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு இரண்டு வாரங்களாக பொதுவெளியில் தோன்றாததால் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன.
லி ஷாங்ஃபு
The Financial Times வெளியிட்ட கட்டுரை ஒன்று சீன அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு இரண்டு வாரங்களாக பொதுவெளியில் தோன்றவில்லை.
AP Photo/Vincent Thian
அவர் கடைசியாக ஆகத்து 29ஆம் திகதி அன்று பெய்ஜிங்கில், மூன்றாவது சீனா - ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் பொதுவெளியில் காணப்பட்டார்.
ஜி ஜின்பிங் நோக்கி கேள்விகள்
லி ஷாங்ஃபு மாஸ்கோ மற்றும் மின்ஸ்க் பயணத்திற்குப் பிறகு சீனாவை விட்டு வெளியேறவில்லை. இவ்விவகாரத்தில் பெய்ஜிங் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், வாஷிங்டனில் அதிகாரிகள் சிலர் லி ஷாங்ஃபு ஊழல் விசாரணையின் இலக்காக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் இது ஜனாதிபதி ஜி ஜின்பிங்கினால் நியமிக்கப்பட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சரை அவரது பதவியில் இருந்து நீக்க சீன அதிகாரிகளை தூண்டியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மீது கேள்விகள் எழுந்துள்ளன.
Mark Schiefelbein/AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |