ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்ட தலை: சீனாவில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தை
சீனாவில் 5 மாடி கட்டிடத்தின் ஜன்னல் கம்பியில் சிக்கி கொண்ட குழந்தையை சில இளைஞர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றியுள்ளனர்.
ஜன்னல் கம்பியில் சிக்கிக் கொண்ட குழந்தை
சீனாவின் சோங்கிங் பகுதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னலில் குழந்தை ஒன்று சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீட்டின் இரும்பு ஜன்னல் பகுதியில் நுழைந்த அந்த குழந்தை தவறி விழுந்த நிலையில், தலை மட்டும் இரும்பு ஜன்னலில் சிக்கி கொண்டு அந்தரத்தில் ஆபத்தான முறையில் தொங்கியது.
தடுப்பாக வைக்கப்பட்டு இருந்த குழந்தை கம்பிகளுக்குள் சிக்கி உயிருக்காக போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து குழந்தை ஆபத்தில் சிக்கி இருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடனடியாக குழந்தை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மழையை பொருட்படுத்தாமல் தங்களை உயிரையும் பொருட்படுத்தாமல் அடுக்குமாடி கட்டிடத்தின் பக்க சுவர்களை மிதித்து லாவகமாக ஏறி இரும்பு கம்பியில் சிக்கி தொங்கிய குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
அத்துடன் பரிசோதனைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |