அத்துமீறிய சீனா... திருப்பியடித்த தைவான்: எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி
முதன்முறையாக சீனாவின் அத்துமீறலுக்கு தைவான் எச்சரிக்கை தாக்குதலை முன்னெடுத்துள்ளது
வட்டமிட்ட ட்ரோன்கள் தைவானின் துரித நடவடிக்கையை அடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறியது
தைவான் எல்லைக்குள் அத்துமீறிய சீனா ட்ரோன்களை வெளியேற்றும் நோக்கில் எச்சரிக்கை தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக தைவான் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, சீனாவின் அத்துமீறல்களுக்கு வலுவான எதிர் நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் இராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளதாக தைவான் ஜனாதிபதி Tsai Ing-wen தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இரு நாடுகளுகளுக்கிடையே கடும் பதற்றமான சூழல் இருந்துவரும் நிலையில், முதன்முறையாக சீனாவின் அத்துமீறலுக்கு தைவான் எச்சரிக்கை தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தைவான் தீவை தங்களின் பிராந்தியமாகவே சீனா கருதி வருகிறது, ஆனால் தைவான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, தைவானின் தாக்குதலை அடுத்து, சீனாவின் ட்ரோன்கள் உடனடியாக பின்வாங்கியதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அருகாமையில் உள்ள தைவானுக்கு சொந்தமான தீவு அருகே சீனா ட்ரோன்கள் வட்டமிடுவதாக ஏற்கனவே தைவான் புகாரளித்து வந்துள்ளது. ஆனால், இது தங்களின் இராணுவப் பயிற்சியின் ஒருபகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது.
@reuters
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பிய பின்னரே, சீனா தொடர் இராணுவப் பயிற்சியை முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, Kinmen தீவுக்கு அருகாமையில் வட்டமிட்ட ட்ரோன்கள் தைவானின் துரித நடவடிக்கையை அடுத்து அப்பகுதியில் இருந்து வெளியேறியதாக அங்குள்ள பாதுகாப்பு தலைவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சீனா தரப்பில் இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மட்டுமின்றி, ட்ரோன்கள் வட்டமிடுவதாக தைவான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சீனா புறந்தள்ளியுள்ளது.