அமெரிக்க போர்க்கப்பல்களை கடுமையாக எச்சரிக்கும் சீன அரசு! இத்தாலியில் 20 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீப்பரவல்.. உலக செய்திகள்
இத்தாலியின் மிலன் நகரில் அமைந்துள்ள 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், அந்த கட்டிடத்தில் இருந்து பலரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி சீனா மற்றும் தைவான், நாடுகள் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு பிரிந்து விட்டது. எனினும் சீன அரசு, தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக்கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் படைகளை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது.
மேலும் நேட்டோவின் இறுதி விமானங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள நிலையில், நாட்டை விட்டு பெருந்திரளான மக்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் தலிபான்கள்காபூல் விமான நிலையத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.