3 மாதங்களில் எடை குறைத்தால் ரூ.1.50 கோடி மதிப்புள்ள Porsche கார் - உடற்பயிற்சி கூடம் அறிவிப்பு
உடல் எடையை குறைத்தால் ரூ.1.50 கோடி மதிப்புள்ள Porsche கார் வழங்குவதாக உடற்பயிற்சி கூடம் ஒன்று அறிவித்துள்ளது.
எடை குறைத்தால் Porsche கார்
மாறி வரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கங்கள் காரணமாக பலருக்கும் உடல் பருமன் ஏற்பட்டு, எடையை குறைக்க உடற்பயிற்சிகூடங்களுக்கு செல்கின்றனர்.

அப்படியாக உடற்பயிற்சி கூடங்களுக்கு வருபவர்களை ஈர்க்க சீனாவில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு இணைய உலகத்தில் கவனம் பெற்றுள்ளது.
வடக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோ பகுதியில் உள்ள உடற்பயிற்சிகூடம், 3 மாதத்தில் 50 கிலோ எடை குறைத்தால் Porsche கார் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சவாலில் கலந்து கொள்வதற்கு பதிவுக்கட்டணமாக 10,000 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம்) செலுத்த வேண்டும். தங்குமிடம் மற்றும் உணவுகள் இலவசமாக வழங்கப்படும்.

3 மாதத்தில் 50 கிலோ எடையை குறைத்தால் ரூ.1.50 கோடி மதிப்புள்ள Porsche கார் வழங்கப்படும். ஆனால் புதிய கார் இல்லை.உடற்பயிற்சி கூட உரிமையாளர் பயன்படுத்திய 2020 மொடல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால், இத்தகைய வேகமான எடை இழப்பின் ஆபத்து குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது கொழப்பு குறைப்பிற்கு பதிலாக தசை இழப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முடி உதிர்தல் மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின்மை ஆகியவற்றுக்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |