பாறையிலிருந்து குதித்த அமெரிக்கர்; சிறிது நேரத்தில் இறந்த சீன நபர்..துயர சம்பவம்
மால்டாவில் அமெரிக்கர் ஒருவர் பாறையில் இருந்து குதித்த பின், ஏற்பட்ட விபத்தில் சீன சுற்றுலாப்பயணி உயிரிழந்தார்.
பாறை வளைவு
ஐரோப்பிய தீவான மால்டாவில் உலகப் புகழ்பெற்ற பகுதி 'Kissing Elephants' பாறை வளைவு.
இங்கு சனிக்கிழமை மாலை, 26 வயதான சீன நபர் ஒருவர் பாறை வளைவின் கீழே ஜெட்-ஸ்கியில் சென்றுகொண்டிருந்தபோது, பெரிய பாறைகள் அவர் மீது விழுந்துள்ளது.
பரிதாபமாக உயிரிழந்த சீன நபர்
இதில் கடற்படுகையில் சிக்கிய சீன நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே ஜெட்-ஸ்கியில் இருந்த 27 வயது சீனப் பெண் பலத்த காயமடைந்தார்.
32 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர், பாறை வளைவின் மீது இருந்து கடலில் குதித்த சிறிது நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாக Times of Malta ஊடகம் தெரிவித்தது.
குறித்த அமெரிக்க சுற்றுலாப் பயணி அவ்வழியாக சென்ற படகு ஒன்றால் மீட்கப்பட்டார்; அவர் Mgarr துறைமுகத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |