சீனாவின் திடீர் இராணுவ நகர்வுகள்... கவலை தெரிவித்த ஜப்பானும் தைவானும்
பிராந்தியத்தில் சீன இராணுவ நடவடிக்கைகள் திடீரென அதிகரித்துள்லது குறித்து தைவானும் ஜப்பானும் கவலை தெரிவித்துள்ளது.
100 க்கும் மேற்பட்ட
கிழக்கு ஆசிய கடல் பகுதியில் இந்த வாரம் சீனா ஏராளமான கப்பல்களை நிறுத்தியதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு அதன் மிகப்பெரிய கடற்படை நகர்வை முன்னெடுத்துள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான Reuters வெளியிட்டுள்ள தகவலில், கிழக்கு ஆசிய கடல் முழுவதும் ஏராளமான கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், சுமார் 100 க்கும் மேற்பட்டவை காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தைவான் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கரேன் குவோ தெரிவிக்கையில், சீனாவின் செயல்பாடு தைவான் நீரிணையுடன் மட்டும் நின்றுவிடவில்லை, ஆனால் மஞ்சள் கடலில் இருந்து கிழக்கு சீனக் கடலில் உள்ள சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளுக்கு அருகிலுள்ள நீர் வழியாக, தென் சீனக் கடல் மற்றும் மேற்கு பசிபிக் வரை நீண்டுள்ளது என்றார்.

அச்சுறுத்தல்
மட்டுமின்றி, இது உண்மையில் இந்தோ-பசிபிக் மற்றும் முழு பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தலையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றார். மேலும், ஒரு பெரிய சக்தியாக சீனா தனது பொறுப்புகளை நிறைவேற்றவும், அதன் செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் நாங்கள் குறிப்பாக அழைப்பு விடுக்கிறோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, பாதுகாப்புப் படையினர் முழுமையான சூழ்நிலை விழிப்புணர்வைப் பராமரிக்கவும், சரியான நேரத்தில் தகவல்களை வழங்கவும் தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வெளிவரும் தகவல்களை ஜப்பான் அறிந்திருந்தது என்றும் சீன இராணுவ நகர்வுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் Shinjiro Koizumi தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |