37 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் சந்தித்த மகன்: பாட்டியின் அவசர முடிவால் ஏற்பட்ட பிரிவு
37 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்து சென்ற தங்களது மகனை சீன பெற்றோர் சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியுள்ளது.
பாட்டியின் அவசர முடிவு
சீனாவை சேர்ந்த பெற்றோர் ஒருவர் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற மகனை 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துள்ளனர்.
1986ம் ஆண்டு தம்பதிகளுக்கு குழந்தை பிறந்த ஒரு நாளே ஆன நிலையில், குழந்தையை Zhao என்ற குடும்ப பெயர் கொண்ட நபரின் அவர்களது பாட்டி வழங்கியுள்ளார்.
தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மேலும் ஒரு குழந்தையை அவர்களால் வளர்க்க முடியாது என்று கருதி அவர்களது பாட்டி இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
குழந்தையை தத்தெடுத்து கொண்ட நபர் இதற்காக எவ்வளவு தொகை பாட்டிக்கு வழங்கினார் என்பது தெரியவில்லை, ஆனால் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு பின்னரே தெரியவந்துள்ளது.
மீண்டும் இணைந்த குடும்பம்
குழந்தையை பிரிந்து வாடிய பெற்றோர், பாட்டி உயிரிழந்த பிறகு சுமார் 3 தசாப்தங்களாக எப்படியாவது தங்கள் மகனுடன் இணைந்து விட வேண்டும் என்பதற்காக தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதியில் Zaozhuang வசித்து வரும் Pang என்ற குடும்ப பெயர் கொண்ட நபரின் இரத்த மாதிரிகளுடன் பெற்றோர்களின் இரத்த மாதிரியும் ஒத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டிஎன்ஏ தரவுகள் பலமுறை சரிபார்க்கப்பட்ட பிறகு பொலிஸாரின் உதவியுடன் கடந்த ஆகஸ்ட் 3ம் திகதி Pang தன்னுடைய உயிரியல் பெற்றோர்களை Weinan-ல் 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தார். அப்போது, பெற்றோர்கள் தங்கள் மகனிடம் நடந்தவற்றிக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
இவர்களின் மறு இணைவு தொடர்பான வீடியோ சீனாவில் உணர்ச்சி பெருக்கை தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |