சீனாவில் பொலிஸ் நாய் செய்த சிறிய தவறு! ஆண்டு போனஸை பறித்த அதிகாரிகள்
சீனாவில் பொலிஸ் நாய் ஒன்று செய்த சிறிய தவறுக்காக அதன் போனஸ் பறிக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
பொலிஸ் நாய்க்கு போனஸ் பறிப்பு
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் பணியாற்றும் ஃபுஜாய்(Fuzai,) என்ற பொலிஸ் நாய்க்கு வழங்கப்படும் ஆண்டு போனஸ் பறிக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ணியின் போது தூங்கியதும், உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததும் தான் இந்த தண்டனைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
வெறும் நான்கு மாத வயதிலேயே வெடிபொருள் கண்டறிதல் பணியில் சேர்ந்த ஃபுஜாய், சிறிது காலத்திலேயே சமூக ஊடகங்களில் பிரபலமானது.
சமூக ஊடகங்களில் அதிகரித்த விவாதம்
ஆனால், அதன் சமீபத்திய நடத்தை காரணமாக அதன் போனஸ் பறிக்கப்பட்டு இருப்பது, சமூக ஊடகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சிலர், ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் பொருந்தும் என்பதால், ஃபுஜாய்க்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமானது என்று வாதிடுகின்றனர்.
மற்றொரு பிரிவினர், ஃபுஜாய் ஒரு நாய் என்பதால், அதை மனிதர்களைப் போல நடத்த முடியாது என்றும், அதன் சிறிய தவறுகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |