ரூ.1 கோடி சம்பளம்., 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்த மணப்பெண்ணை தேடும் 35 வயது பேராசிரியர்!
ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் மார்க்சிய பள்ளி இணைப் பேராசிரியர் லூ, தனது வருங்கால வாழ்க்கைத் துணைக்கான கடுமையான நிபந்தனைகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவரது இந்த செயல், பண்டைய அரசர்களின் அந்தப்புர பெண்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஒத்திருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
லூவின் தனிப்பட்ட விவரம்
புகழ்பெற்ற சீன பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 35 வயதான லூ, ஆண்டு வருமானமாக 1 மில்லியன் யுவான் (சுமார் ₹1.16 கோடி) சம்பாதிக்கிறார்.
175 செ.மீ உயரம், 70 கிலோ எடை கொண்ட லு , விளையாட்டு மற்றும் நிதி முதலீடுகளில் ஆர்வம் உள்ளவர் ஆவார்.
லூ, ஜெஜியாங் மாகாணத்தின் யிவுவில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒரே குழந்தை ஆவார்.
லூவின் மணப்பெண் தேர்வு நிபந்தனைகள்
2000-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த பெண்ணாக இருக்க வேண்டும், அதாவது அவரை விட குறைந்தது ஒரு தசாப்தம் இளையவராக இருக்க வேண்டும்.
165-171 செ.மீ உயரம், ஒல்லியான மற்றும் நல்ல தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
ஒன்பது புகழ்பெற்ற சீனப் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உலக அளவில் முதல் 20 இடங்களில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களையும் பரிசீலிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சட்டம் அல்லது மருத்துவம் படித்திருந்தால் கூடுதல் சிறப்பு என குறிப்பிட்டுள்ளார்.
தோற்றம், குடும்ப செல்வம் அல்லது தனிப்பட்ட திறன்கள் போன்ற துறைகளில் சிறந்த தகுதிகள் கொண்ட பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மறுப்பு
லூவின் பதிவு தொடர்பான சர்ச்சை எழுந்ததை அடுத்து, ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் மார்க்சிய பள்ளி மார்ச் 17 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில், லூவின் அந்த பதிவிற்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளது.
லு இந்த விஷயத்தை சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விவாதம்
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தை தூண்டியுள்ளது.
லூவின் சாதனைகள் அவரது தேர்விற்கு நியாயம் சேர்க்கின்றன என்று சிலர் கூறுகின்றனர்.
மற்றவர்கள் அவரது அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தனர், உறவுகளை ஒரு வணிக பரிவர்த்தனையாகவும், பெண்களை ஒரு பொருளாகவும் பார்க்கும் கண்ணோட்டமாக கருதி விமர்சனம் செய்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |