கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்... வான்வெளியை மூடிய ஸ்பெயின் விமான நிலையங்கள்
CZ-5B என அறியப்படும் சீன ராக்கெட்டின் ஒருபகுதி ஸ்பெயின் வான்வெளி ஊடாக கடந்து செல்வதாக எச்சரிக்கை
ராக்கெட்டின் 23 டன் உடல் பகுதியானது பூமிக்கு திரும்பும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை
கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் காரணமாக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பார்சிலோனா, டாரகோனா, ஐபிசா மற்றும் ரியஸ் ஆகியவற்றிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
@reuters
மொத்தம் 40 நிமிடங்களில் கட்டுப்பாடுகள் விலக்கப்படும் என்றே கூறப்பட்டாலும் ஐபிசா பகுதியில் மூன்று மணி நேரம் வரையில் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
CZ-5B என அறியப்படும் அந்த சீன ராக்கெட்டின் ஒருபகுதி ஸ்பெயின் வான்வெளி ஊடாக கடந்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கேட்டலோனியா மற்றும் பிற பகுதிகளில் காலை 9.38 முதல் 10.18 வரை விமானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சீனா தனது புதிய டியாங்காங் விண்வெளி நிலையத்தின் மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியை திங்கள்கிழமை ஏவியது. இதில் குறித்த ராக்கெட்டின் 23 டன் உடல் பகுதியானது பூமிக்கு திரும்பும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கையும் விடுத்தனர்.
@getty
மட்டுமின்றி, ஸ்பெயின் அதன் பாதையில் உள்ள நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டது.
இந்த நிலையில், பூமிக்கு திரும்பும் அந்த ராக்கெட் துண்டின் புதிய பாதை ஐரோப்பாவின் சில பகுதி மீது பறக்கும் என்பதை உறுதி செய்துள்ளனர். மணிக்கு 17,500 மைல் வேகத்தில் குறித்த ராக்கெட் பகுதி பறக்கிறது என்பதையும் தெரிவித்துள்ளனர்.