தூக்கிட்டு உயிரிழந்த பெண்ணுக்காக பாடகி சின்மயி ஆதங்கப் பதிவு! நடந்தது என்ன?
தமிழகத்தில் பெண்ணொருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சின்மயி தனது பதிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 7 மாத பெண் குழந்தை நான்காவது மாடியின் பால்கனி கூரையில் இருந்து தவறி விழுந்தது.
இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை பத்திரமாக மீட்டனர். ஆனால், குழந்தையின் பெற்றோரின் கவனக்குறைவால் இது நடந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சம்பவத்திற்கு பின் சென்னையில் இருந்த குழந்தையின் தாய் ரம்யா, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரம்யா திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். குழந்தையை சரியாக கவனிக்கவில்லை என்று எழுந்த விமர்சனங்களால் மன உளைச்சலில் இருந்த ரம்யா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ரம்யாவின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் ரம்யாவை விமர்சித்தவர்களை குறிப்பிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது பதிவில் யூடிபர் ஒருவரை குறிப்பிட்டு, 'இவரைப் போன்ற நபர்கள் ட்வீட் மூலம் குழந்தையின் பெற்றோரை அவமானப்படுத்தினார்கள். இப்போது குழந்தையின் தாய் தனது உயிரை மாய்த்துக் கொண்டதால், இந்த மனித பிறவிகள் அனைத்தும் இப்போது கொண்டாடலாம்' என கூறியுள்ளார்.
People like @itisprashanth and those who have shamed the parent/s under this Tweet
— Chinmayi Sripaada (@Chinmayi) May 19, 2024
All these human creations can perhaps celebrate now since the mother of this child has now killed herself. https://t.co/z8j45UcqwV https://t.co/lJ4IORzXKA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |