இந்திய மாணவர்களை ஈர்க்க 'Choose France Tour 2024' நிகழ்ச்சியை தொடங்கிய பிரான்ஸ் அரசு
பிரான்ஸ் அரசு மற்றும் கேம்பஸ் பிரான்ஸ் இணைந்து 'Choose France Tour 2024' நிகழ்வை தொடங்கியுள்ளது.
இந்திய மாணவர்களை நோக்கி விரிவான கல்விச் சாத்தியங்களை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சி, ஐந்து நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில், 50-க்கும் மேற்பட்ட பிரபலமான பிரெஞ்சு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவங்கள் பங்கேற்றுள்ளன.
பிரான்ஸ், உயர்கல்வி மூலம் சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. 600-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன மற்றும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
பிரான்ஸ் தனது கல்வி மற்றும் பணியாற்றும் வாய்ப்புகளால் சர்வதேச மாணவர்களை ஈர்த்து வருகிறது.
'Choose France Tour' நிகழ்ச்சி, இந்திய மாணவர்களுக்கும் பிரான்ஸ் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு முக்கியப் பாலமாக செயல்படுகின்றது.
இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதரான தியெரி மாது கூறியதாவது, “பிரான்சில் கல்வி என்பது உயர் தரத்தையும் கல்வித் திறனையும் பொருள்படுத்துகிறது. பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் உலக அளவில் முன்னணி இடத்தில் உள்ளன. சாங்காய் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளதுடன், 76 நோபல் பரிசு மற்றும் 15 ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றுள்ளோம்" என்றார்.
மும்பையைத் தொடர்ந்து, சண்டிகர், டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |