இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கிறிஸ் சில்வர்வுட் நியமிக்கப்பட்டுள்ளதான இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
சில்வர்வுட், அக்டோபர் 2019ல் இங்கிலாந்தின் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன்பு இங்கிலாந்து பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தவர், 2019 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றபோது அப்போதைய தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸின் கீழ் பணிபுரிந்தார்.
உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட கொடூர படுகொலைகள்... ‘போர்க்குற்றம்’ என அறிவித்தது ஜேர்மனி
இங்கிலாந்துக்காக ஆறு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சில்வர்வுட், யார்க்ஷயர் மற்றும் மிடில்செக்ஸ் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார்.
இலங்கை தேசிய அணியுடனான அவரது முதல் பணி, வங்க தேசத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடராகும். அவர் இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.