பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்போது நிகழ்ந்த பயங்கரம்
Death row killer Christa Pike rushed to hospital after surviving two lethal injections: அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியின்போது அவர் உயிரிழக்காததால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காததால், பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றும்போது...
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்திலுள்ள Nashville என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறையில், கிறிஸ்டா பைக் (Christa Pike, 50) என்னும் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

நேற்று, சாட்சியங்கள் சூழ்ந்திருக்க, கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக, அவரது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது.
ஆனால், இரண்டு முறை ஊசி மூலம் மருந்தைச் செலுத்தியும் அவர் உயிரிழக்கவில்லை. மாறாக, அவர் சத்தமாக குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருக்க, மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துள்ளார்கள்.

அப்போது, அவருக்கு இதயத்துடிப்பு இருப்பதும் தெரியவரவே, உடனடியாக கிறிஸ்டா மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
யார் இந்த கிறிஸ்டா?
கிறிஸ்டா பைக், தனக்கு 18 வயதே இருக்கும்போது, தனது காதலனான டாடரில் ஷிப் (Tadaryl Shipp, 17) எனும் இளைஞருடன் சேர்ந்து, கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்னும் 19 வயது இளம்பெண்ணை, சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தார்.

வெளியே சொல்ல முடியாத அளவுக்கு கொலீன் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அந்த வழக்கில், டாடரிலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொலீன் தன் காதலரை தன்னிடமிருந்து திருடிக்கொள்ள முயன்றதால் அவரைக் கொலை செய்ததாக தெரிவித்திருந்தார் கிறிஸ்டா. கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

விடயம் என்னவென்றால், கிறிஸ்டாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால், அமெரிக்க வரலாற்றில் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண்ணாகியிருப்பார் கிறிஸ்டா.
இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றும்போது, கைதி உயிர் பிழைத்தது எப்படி, என்ன தவறு நிகழ்ந்தது, என்ன காரணத்தால் அவர் உயிரிழக்கவில்லை, அவர் உடலில் செலுத்தப்பட்ட மருந்து வேலை செய்யவில்லையா என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
அதைத் தொடர்ந்து, அதிர்ச்சியையும் பரபரப்பையும் உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.