புடின் அழிந்து போகட்டும்! கிறிஸ்துமஸ் உரையில் ஜெலென்ஸ்கி விருப்பம்
ரஷ்ய ஜனாதிபதி புடின் அழிந்து போகட்டும் என்று கிறிஸ்துமஸ் தின உரையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் விடாமல் தொடர்ந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 3 பேர் வரை கொல்லப்பட்டனர்.
இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் உக்ரைன் நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் உரையை ஜெலென்ஸ்கி சமீபத்தில் வெளியிட்டு இருந்தார், அதில் மறைமுகமான ரஷ்ய ஜனாதிபதி புடின் அழிந்து போகட்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
ஜெலென்ஸ்கி கிறிஸ்துமஸ் உரை
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து உரையில், ரஷ்யா தாக்குதல் நடத்தி ஏற்படுத்தியுள்ள இந்த துன்பங்களுக்கு மத்தியிலும், உக்ரைனிய மக்களின் இதயங்களை அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஒற்றுமையை ரஷ்யாவால் எந்தவொரு குண்டு வீசி அழிக்கவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முடியவில்லை என தெரிவித்தார்.

மேலும், நாம் அனைவரும் இன்று ஒரு கனவை காண்கிறோம், அது அனைவரிடம் உள்ள ஆசை தான், (புடின் பெயரை குறிப்பிடாமல்) அவன் அழிந்து போகட்டும் என்று உக்ரைன் மக்கள் ஓவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
நாம் கடவுளிடம் உக்ரைனுக்கான அமைதியைக் கேட்கிறோம், அதற்காக போராடுகிறோம், பிராத்திக்கிறோம் என்றும் அது தங்களுக்கு உரித்தானது என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |