பிரித்தானிய மக்களுக்கு உங்கள் நாட்டின் உறவு முக்கியமானது! புதிய சைப்ரஸ் ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய உயர் ஆணையர்
துருக்கியின் அண்டை நாடான சைப்ரஸின் புதிய ஜனாதிபதியாக நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் தெரிவாகியுள்ளார்.
நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்
சைப்ரஸில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சரான நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் மற்றும் ஆண்டிரியாஸ் மேவ்ராய்யனிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நிகோஸ் 51.9 சதவீத வாக்குகளையும், ஆண்டிரியாஸ் 48.1 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் புதிய ஜனாதிபதியாக நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் தெரிவாகியுள்ளார்.
@REUTERS
அவரது ராஜதந்திர மற்றும் அரசாங்க பின்னணி காரணமாக, தெளிவான வெளியுறவுக் கொள்கை பார்வையுடன் அவர் சைப்ரஸ் இருதரப்பு மற்றும் பிராந்திய ரீதியாக அதன் புவிசார் மூலோபாய பங்கை பெருக்குவதற்கு முன்னுரிமையை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேவ்ராய்யனிஸ் வேதனை
தோல்வியுற்ற ஆண்டிரியாஸ் மேவ்ராய்யனிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஆயிரக்கணக்கான மக்களுடன் பகிர்ந்துகொண்ட ஒரு சிறந்த பயணம். சைப்ரஸுக்கு தேவையான மாற்றத்தை எங்களால் அடைய முடியவில்லை என்று நான் வருந்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இர்ஃபான் சித்திக் வாழ்த்து
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து பிரித்தானிய உயர் ஆணையர் இர்ஃபான் சித்திக் வெளியிட்ட பதிவில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கிறிஸ்டோடூலிட்ஸிற்கு வாழ்த்துக்கள். பிரித்தானியா - சைப்ரஸ்யின் நீண்ட, வலுவான உறவு, எங்கள் மக்களுக்கு முக்கியமானவை. நம்முடைய இருதரப்பு மற்றும் காமன்வெல்த் கூட்டாண்மை மற்றும் சைப்ரஸ் தீர்வுக்கான உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக, உங்களுடனும் உங்கள் குழுவினருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Congratulations & best wishes to President Elect @Christodulides! #UKCYties are long, strong and important to the UK & its people. I look forward to working with you & your team across our bilateral & #Commonwealth partnership & in support of your efforts on Cyprus Settlement.
— Irfan Siddiq (@IrfanUKAmb) February 12, 2023
@IrfanUKAmb