நேட்டோ உறுப்பினர்களைத் தாக்கக்கூடாது... ரஷ்யாவை எச்சரித்த சிஐஏ இயக்குனர்
CIA director warned Russia: நேட்டோ உறுப்பு நாடுகளைத் தாக்க வேண்டாம் என சிஐஏ இயக்குனர் ரஷ்யாவை எச்சரித்தார்.
இந்த வாரம் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க உளவு அமைப்புகளின் தலைவர், நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ரஷ்யாவை எச்சரித்துள்ளகாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா நேட்டோ கூட்டணியைச் சோதிக்க முற்படக்கூடும் என்ற அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளுக்கு மத்தியில், நேட்டோ உறுப்பு நாடுகளைத் தாக்குவதிலிருந்து ரஷ்யாவைத் தடுக்க சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் திட்டமிட்டிருந்ததாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டன.
மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்திலிருந்து அரசுக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் ஒன்றில், ரட்க்ளிஃப் செவ்வாய்க்கிழமை மாஸ்கோவிற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பின் உறுதியைச் சோதிக்கத் திட்டமிட்டிருக்கலாம் என்ற அச்சத்தாலோ அல்லது ஈரான் மீதான அமெரிக்காவின் தீவிரப்படுத்தப்பட்ட தடைகளுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கத்துடனோ ராட்க்ளிஃப் பயணம் மேற்கொண்டார் என்ற ஊகங்களுக்கு ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்தார்.
அது ஒரு விதத்தில் வழக்கமான நடைமுறை போன்றதுதான் என பதிலளித்துள்ள ட்ரம்ப், மக்களை ஏமாற்ற நான் விரும்புவதில்லை. உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வருவதை நாங்கள் காண விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
2022-இல் உக்ரைனுடனான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட மிக உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளில் ராட்க்ளிஃப் ஒருவராவார்.

இந்த நிலையில், ரஷ்யாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான SVR-இன் தலைவர் செர்ஜி நரிஷ்கின், மாஸ்கோவில் ராட்க்ளிஃப் உடன் பணி ரீதியான சந்திப்பு ஒன்றை நடத்தியதை உறுதிப்படுத்தினார்.
மேலும், தங்கள் சார்ந்த உளவுத்துறைகளின் வரம்பிற்குள் வரும், குறிப்பிடப்படாத மற்றும் உணர்திறன் மிக்க விவகாரங்கள் குறித்து விவாதித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் சந்தித்ததில் விசித்திரமான எதுவும் இல்லை என்றும் நரிஷ்கின் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |