தாலிபான்கள் வந்த பின்பு புர்கா உடைக்கு கட்டாயப்படுத்தபட்டாரா பெண் பத்திரிகையாளர்? அவரே வெளியிட்ட பதிவு
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வந்த பின்பு பெண் பத்திரிகையாளர் ஒருவர் புர்கா உடையில் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அதன் உண்மை என்ன என்பதை அவரே வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் இப்போது தாலிபான்கள் கைவசம் வந்துவிட்டதால், அங்கு பல்வேறு மாற்றங்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பெண்கள் விஷயத்தில் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம், இப்போது பெண்கள் மதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் கூறினாலும், இது எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டுமே என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்கள் பெண் பத்திரிக்கையாளரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. அதில், தாலிபான்கள் வருகைக்கு முன், பின் என்று கூறப்பட்டிருந்தது.
அதன் பின், அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் பத்திரிகையாளரின் பெயர் Clarissa எனவும், அவர் அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் சிஎன்என் பத்திரிகையாளர் என்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த மீம் தவறானது. முதலில் உள்ள புகைப்படம் தனியார் பகுதியில் எடுக்கப்பட்டது. கீழ் உள்ள புகைப்படம் காபூலில் தலிபான்கள் கட்டுப்பாட்டு பகுதியில் எடுக்கப்பட்டது.
This meme is inaccurate. The top photo is inside a private compound. The bottom is on the streets of Taliban held Kabul. I always wore a head scarf on the street in Kabul previously, though not w/ hair fully covered and abbaya. So there is a difference but not quite this stark. pic.twitter.com/BmIRFFSdSE
— Clarissa Ward (@clarissaward) August 16, 2021
நான் இதற்கு முன்னரும் காபூலில் எனது தலையில் துணி அணிந்திருக்கிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இதற்கு முன்பு இணையவாசிகள், சிலர் தாலிபான்கள் அடிமைத்தனத்திற்கு இந்த புகைப்படம் ஓர் உதாரணம் என்று கூறி வைரலாக்கி வந்த நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், Clarissa விளக்கம் கொடுத்துள்ளார்.