9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்..தேர்வறைக்கு செல்லும் போது நேர்ந்த சோகம்
குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 9-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மாரடைப்பால் மரணம்
சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி, ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேர்வு அறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்தார்.
நினைவிழந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பள்ளி நிர்வாகத்தினரை அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் மாணவிக்கு ஏற்பட்ட மாரடைப்பின் பிண்ணனி என்னவென்று அறியமுடியும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர்களிடம் ‘மாணவி உடல் நலக்குறைவுடன் இருந்தாரா, இதய நோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்கனவே அவருக்கு இருந்து வந்துள்ளதா’ என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தேர்வு அறைக்குள் நுழையும்போது மாணவிக்கு மாரடைப்பு நேரிட்டதால், பள்ளி செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் தந்த அழுத்தங்கள் எதுவும் அவரது உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருந்ததா என்பது குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணமடைந்திருப்பது குஜராத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |