கழிவறையில் ஏற்பட்ட சிக்கல்., புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம்
ஆஸ்திரியா நாட்டில் விமானம் ஒன்று கழிவறையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக புறப்பட்ட இடத்துக்கே திரும்ப வேண்டியிருந்தது.
2 மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம்
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிலிருந்து நியூயார்க்கிற்கு சென்றுகொண்டிருந்த ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 2 மணி நேரத்தில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது.
அந்த விமானத்தில் இருந்த இருந்த 8 கழிப்பறைகளில் 5 அடைத்துக்கொண்டதே அதற்குக் காரணம்.
AFP
தொழில்நுட்பக் கோளாறு
ஏப்ரல் 17, தினங்கட்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தில், 300 பேரை ஏற்றியிருந்த அந்த Boeing 777 ரக விமானம், 8 மணி நேரம் பயணம் செய்திருக்கவேண்டியது.
ஆனால் கழிப்பறைகளில் ஏற்பட்ட சில கோளாறுகளால் விமானத்தை புறப்பட்ட இடத்துக்குத் திருப்பிவிட முடிவெடுக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கழிப்பறைகள் சரியாக ஃப்ளஷ் செய்யப்படவில்லை என்பதைக் கண்டறிந்த பின்னர் விமானக் குழுவினர் திரும்ப முடிவு செய்தனர் என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று தெரிவித்தார்.
Reuters
இதற்கு முன்பு ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டதில்லை என்று அவர் கூறினார்.
விமானம் ஏற்கனவே சரி செய்யப்பட்டு மீண்டும் சேவைக்கு வந்துள்ளதாக ஆவர் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பயணிகள் மற்ற விமானச் சேவைகளின் மூலம் பயணத்தைத் தொடர்ந்தனர்.