மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள் - பாஜகவை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின்
பாஜகவினர் மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இதில் பேசிய மு.க.ஸ்டாலின் பாஜக கட்சியை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது,
'பாஜகவுக்கு இது வாழ்வா சாவா என்ற தேர்தல்! மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் எடுக்கின்ற முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது.
அதனால் கோபம் அதிகமாகும். நம்மை நோக்கிப் பாய்வார்கள்! கடந்த காலங்களில், பல தடைகளை சமாளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது; இந்த முறையும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றிட வேண்டும்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |