2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட விஜய் - யார் யாரை சந்திக்கிறார்?
தமிழக முதலமைச்சர் விஜய் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்தது கவனத்தை ஈர்த்தது.

தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சராக அவரின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இரு நாள் பயணமாக டெல்லி செல்லும் விஜய் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.
இந்த சந்திப்பில், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை, மும்மொழி கொள்ளை, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜே.என்.யூ பல்கலைகழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைக்க ஏற்பாடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதைத்தொடர்ந்து நாளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |