காபூலில் CNN பெண் செய்தியாளர் மற்றும் குழுவினருக்கு நேர்ந்த கதி.. கோபத்தில் தலிபான்கள் செய்த செயல்! கமெராவில் சிக்கிய சம்பவம்
ஆப்கான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஊடக நிறுவனமான CNN-ன் பெண் செய்தியாளர் மற்றும் குழுவினரை தலிபான்கள் தாக்கிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
காபூலை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல், அந்நாட்டு ஊடகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
செய்தி வாசித்த பெண் ஊடகவியலாளர்கள் பணி நீக்கம், பொழுதுபோக்கு சேனல்களில் பாடல்கள், இசைநிகழ்ச்சிகளுக்கு தடை, அதற்கு பதிலாக இஸலாமிய சொற்பொழிவு ஒளிபரப்ப உத்தரவு மற்றும் அங்கு பணியாற்றும் சர்வதேச பெண் ஊடகவியலாளர்கள் முகத்தை மூடிய படி புர்கா அணி வேண்டும் உட்பட தலிபான்கள் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கர்கள் மற்றும் ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சந்திக்கும் தடைகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற CNN தலைமை சர்வதேச நிருபர் கிளாரிசா வார்டு மற்றும் தயாரிப்பாளர் பிரென்ட் ஸ்வைல்ஸ் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கையில் தடியுடன் CNN குழுவினர் அருகே வந்த தலிபான் போராளி ஒருவர், கிளாரிசா வார்டிடன் முகத்தை மூடுமாறு கோரியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, சம்பவயிடத்தில் இருந்த ஆப்கானியர்கள், விமான நிலையத்திற்கு எப்படி செல்வது என்பது குறித்து CNN குழுவினரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
CNN குழுவினரை சுற்றி கூட்டம் கூடியதை கண்டு கடுப்பான தலிபான் போராளி, துப்பாக்கியை காட்டி மக்களை விரட்டியடித்துள்ளார்.
Here's the moment that @clarissaward and crew were confronted by the Taliban on the streets of Kabul. pic.twitter.com/2ueKYbR8xg
— Oliver Darcy (@oliverdarcy) August 18, 2021
இதன் பின் CNN குழுவினர் அங்கிருந்து வெளியேற முடிவு செய்த போது, இரண்டு தலிபான்கள் அவர்களை துப்பாக்கியால் தாக்க முயன்றுள்ளனர்.
குறித்த பரபரப்பு காட்சியை CNN ஊடகம் வெளியிட்டுள்ளது.