Coconut Milk Halwa: ஒரு கப் தேங்காய் பால் இருந்தால் நிமிடத்தில் எச்சில் ஊறும் அல்வா தயார்!
Healthy Food Recipes
By Kirthiga
துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என அறுசுவைகள் இருந்தாலும் பலருக்கும் பிடிப்பது இந்த இனிப்பு சுவை தான்.
இனிப்பை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும்... அல்வா என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதற்கு இன்று வரையில் ஒரு மவுசு இருக்க தான் செய்கிறது.
எனவே வீட்டில் அடிக்கட்டி இருக்கும் தேங்காய் மட்டும் வைத்து எப்படி சுவையான அல்வா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
ஒரு கப் - துருவிய தேங்காய்
-
அரை கப் - தேங்காய் பால்
- தேவையான அளவு - முந்திரி
-
கால் கப் - வெல்லம்
- ஒரு மே.கரண்டி - கான்பிளவர் மாவு
-
ஒரு மே.கரண்டி - நெய்
- இரண்டு சிட்டிகை - ஏலக்காய் பொடி
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
- கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பின்னர் கான்பிளவர் மாவுடன் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து அதை அதில் ஊற்றி கிளறினால் அல்வா பதம் கிடைத்துவிடும்.
- இறுதியாக ஏலக்காய் பொடியும் நெய்யில் வறுத்து வைத்த தேங்காய் துருவல் மற்றும் முந்திரியை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான தேங்காய் பால் அல்வா தயார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US