தொழிலாளர்களை விமானத்தில் பறக்க வைத்து அழகு பார்த்த கோயம்புத்தூர் கேட்டரிங் முதலாளி!
கோயம்புத்தூரைச் சேர்ந்த கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் தனது தொழிலாளர்களை விமானத்தில் அழைத்துச் சென்று 35 வருட கனவை நிறைவேற்றியுள்ளார்.
கோயம்புத்தூர் முதலாளி
தனது தந்தையின் தொழிலாளர்களை பெரியவனாகி விமானத்தில் அழைத்துச் செல்வேன் என்று கூறிய சிறுவன் 35 வருடங்கள் கழித்து அந்த கனவை நிறைவேற்றியுள்ளார்.
தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ராஜன். இவர் பிரியா கேட்டரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய மகன் தான் பிரகாஷ் தேவராஜன்.
இந்த நிறுவனத்தின் 26க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இதில் 26 தொழிலாளர்களை கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து சேலம் வரை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர்களை கேரளா அழைத்துச் சென்றதோடு ஆலப்புழாவில் அவர்களது குடும்பத்தினரை இரண்டு நாட்கள் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலாப் பயணம் ஆகியவற்றை மேற்கொள்ள செய்துள்ளனர்.
இதுகுறித்து நிறுவனத்தில் வேலை செய்யும் சரோஜினி என்பவர் பேசுகையில், "இந்த நிறுவனத்தின் முதலாளியாக தற்போது பிரகாஷ் தேவராஜன் தான் இருக்கிறார். அவர் மிகவும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர்.
அவர் சிறுவயதில் இருக்கும்போது பெரியவனாகி உங்களையெல்லாம் விமானத்தில் அழைத்துக் கொண்டு செல்வேன் என்று கூறினார். அதனை தற்போது 35 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றியுள்ளார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |