கோயம்புத்தூரில் பாஜக வென்று 25 ஆண்டுகளாகிவிட்டது.., அண்ணாமலை போட்டியால் பெரும் எதிர்பார்ப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
கோவை தொகுதி
கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தபோது கடந்த 1998 -ம் ஆண்டில் கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். அப்போது, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.ஆர்.சுப்பையனை 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பின்னர், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்ததையடுத்து, 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.நல்ல கண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு நடந்த 2004 மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, 2014 மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாக ராஜனை எதிர்த்து போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார்.
மேலும், 2019 மக்களவை தேர்தலிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை ராதாகிருஷ்ணன் இழந்தார்.
இதன்படி, கோவை மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன.இந்நிலையில், கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து தொகுதியாக கோவை மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |