சிங்கப்பூரில் சக பணியாளர்களின் ஊதியம் குறித்து அறிந்துகொள்ள முயற்சித்த இந்திய வம்சாவளியினருக்கு சிறை
தன்னுடன் பணி செய்யும் பிற பணியாளர்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் அதீத ஆர்வம் கொண்ட சிலர் இருக்கிறார்கள்.
அப்படி, தன் சக பணியாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள முயன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு, சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யார் அந்த நபர்?
தினத் சில்வமணி முதலியார் (35) என்னும் இந்திய வம்சாவளியினரே தன் சக பணியாளர்களின் ஊதியம் குறித்து அறிந்துகொள்ள முயன்று சிறை சென்றவர் ஆவார். தினத், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தில் பணியாற்றிவரும் அலுவலர் ஆவார்.
தன்னுடன் பணியாற்றும் மற்றவர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது. தனக்கும் அவர்களுக்கும் ஊதியத்தில் என்ன வித்தியாசம் என்பதை அறிந்துகொள்வதற்காக, தன்னுடன் பணியாற்றும் Liong Yan Sin என்பவரின் உதவியை நாடியுள்ளார் தினத்.
இந்த Liongம் தினத்தும் இதற்கு முன் ஒரே வங்கியில் இணைந்து பணியாற்றியவர்கள் ஆவர். Liong, collections officer என்னும் பொறுப்பிலிருப்பதால், தன் சகாக்களின் ஊதியம் குறித்த வங்கித் தரவுகளை அவரால் அணுகமுடியும்.
சிறைத்தண்டனை
ஆக, Liong தனது பொறுப்பை தவறாக பயன்படுத்தி, தினத் கேட்ட தரவுகளை ஆராய்ந்து, அவர் கேட்ட தகவல்களை வாட்ஸ் ஆப் மூலம் அவருக்கு அனுப்பியுள்ளார்.
இருவருமே, தங்கள் பணிக்கு வெளியே, வாடிக்கையாளர்களின் தகவல்களை அணுகவோ, மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்துகொள்ளவோ கூடாது என்பது தெரிந்தும் அவர்கள் அந்த விதியை மீறீயதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, Computer Misuse Act எனும் கணினித் தரவுகளை தவறாகப் பயன்படுத்தும் சட்டத்தின் கீழ், தினத்துக்கு ஐந்து வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தினத்துக்கு உதவிய Liongக்கும், 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |