பெத்தவங்கள கஷ்டப்படுத்த விரும்பல! கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: சிக்கிய கடிதம்
தமிழகத்தில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராஜலிங்கபுறத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துக்குமார். இவரது மகள் பாப்பா தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
முத்துக்குமார் தனது குடும்பம் வறுமையில் வாடிய நிலையிலும், மகளின் படிப்பு முக்கியம் என நினைத்து சம்பாதிக்கும் பணத்தை கட்டணமாக செலுத்தி வந்தார்.
ஆனால், தனது படிப்புக்காக பெற்றோர் மிகவும் துயரப்படுவதாக பாப்பா மனவேதனை அடைந்தார். இந்த நிலையில், நேற்று மாலையில் பாப்பா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்த மாணவியின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அதில், 'எனக்காக மத்தவங்க கஷ்டப்படுறத என்னால் பாக்க முடியல. எனக்கு காலேஜ் பீஸ் கட்ட எங்க வீட்ல அம்மா, அப்பா கஷ்டப்படுறாங்க. மத்தவங்கள கஷ்டப்படுத்த கூடாதுனு தான் இந்த முடிவு. என சாவுல மர்மம் இருக்க கூடாதுனுதான் இந்த லெட்டர். வேற எதுவும் காரணம் இல்ல' என மாணவி பாப்பா எழுதியிருக்கிறார்.