நடுக்கடலில் ஜப்பான் கப்பல் மீது ரஷ்ய கப்பல் மோதி பயங்கர விபத்து! என்ன காரணம்?
நடுக்கடலில் ஐப்பான் கப்பல் மீது ரஷ்ய கப்பல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதற்கு கடுமையான மூடுபனியே காரணம் என Sapporo-வில் உள்ள ரஷ்ய துணைத் தூதர் Sergei Marin தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஜப்பான் Hokkaido-வின் Monbetsu நகர துரைமுகத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் நடுக்கடலில் ஜப்பானின் Daihachi Hokkoumaru மீன்பிடி கப்பல் மீது ரஷ்யாவின் Amur வணிகக் கப்பல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
ஜப்பான் மீன்பிடி கப்பலில் மொத்தம் 5 பேரும், ரஷ்ய வணிகக் கப்பலில் மொத்தம் 23 பேரும் பயணித்துள்ளனர்.
விபத்தில் ஜப்பான் கப்பல் கடலில் கவிழந்தது, கடலில் தத்தளித்த 5 பேரையும் ரஷ்ய கப்பலில் இருந்தவர்கள் மீட்டு, ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு சேவைக்கு தகவல் அளித்துள்ளனர்.
கடல்சார் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு விரைவதற்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்திற்கு கடுமையான மூடுபனியே காரணம் என Sapporo-வில் உள்ள ரஷ்ய துணைத் தூதர் Sergei Marin தெரிவித்துள்ளார்.
கடும் மூடுபனி காரணமாக ரஷ்ய கப்பல் குழுவினர் சிறிய ஜப்பான் கப்பலை பார்த்திருக்கமாட்டார்கள்.
ஜப்பான் கப்பல் கரையில் இருந்து அவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டியதில்லை. ரஷ்ய கப்பலின் கேப்டன் சரியாக செயல்பட்டுள்ளார், விபத்தை தொடரந்து கப்பலை உடனடியாக நிறுத்தி, உடனே மீட்பு பணியை தொடங்கியுள்ளார்.
ஜப்பான் கப்பலில் இருந்து 5 பேரும் மீட்கப்பட்டுள்னர் என Marin கூறினார்.
Three dead after Japanese fishing boat collides with Russian ship https://t.co/hUTyUTuyKq pic.twitter.com/PSy8JX3NwJ
— Andy Vermaut (@AndyVermaut) May 26, 2021
ஆனால்,கடல்சார் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு வருவதற்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துவிட்டனர் என Sergei Marin கூறினார்.