விமான விபத்தில் பிரபல பாடகர் உயிரிழப்பு - இசை கச்சேரிக்கு செல்லும் போது நேர்ந்த சோகம்
பிரபல பாடகர் இசை கச்சேரிக்கு செல்லும் போது விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்தில் பாடகர் உயிரிழப்பு
கொலம்பியவை சேர்ந்த 34 வயதான யீசன் ஜிமெனெஸ் (Yeison Jimenez) அந்த நாட்டின் பிரபல பாடகர் ஆவார்.

Credit : Yeison Jiménez. / Getty Images (Getty Images)
இன்று இரவு கொலம்பியாவின் மரினிலாவில் அவருடைய நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
போயாகாவில் நிகழ்ச்சியை முடித்து அவர், மெடலினுக்குச் சென்று அங்கிருந்து மரினிலா நிகழ்ச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக தனியார் விமானம் ஒன்றில் தனது இசைக்குழுவினர் 3 பேருடன் மெடலினுக்கு புறப்பட்ட போது ஜுவான் ஜோஸ் ரோண்டன் விமான நிலையத்திற்கு அருகில், பிற்பகல் 3 மணியளவில் விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பி உயரே பறக்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
Credit : X.com
இந்த விபத்தில் நொறுக்கி விழுந்த விமானம், தீ பற்றி எரிந்துள்ளது. விமானத்தில் பற்றிய தீயை மீட்பு குழுவினர் அணைத்தனர்.
விமானத்தில் இருந்த 2 விமானிகள்மற்றும் பாடகர் யீசன் ஜிமெனெஸ் உட்பட 6 உயிரிழந்துள்ளதை கொலம்பியா சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
La Aeronáutica Civil lamenta profundamente el siniestro ocurrido en Paipa, Boyacá, en el que fallecieron seis ocupantes de la aeronave N325FA, entre ellos el artista Yeison Jiménez. Expresamos nuestras más sinceras condolencias a sus familias, amigos y seguidores. pic.twitter.com/WFoompeAch
— Dirección Técnica de Investigación de Accidentes (@DIACC_COL) January 11, 2026
விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. யீசன் ஜிமெனெஸ் மறைவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |