₹4,400 கோடி நிதி! கூகுள் ஆதிக்கத்துக்கு சவால் விடும் Comet: உலக டெக் ஜாம்பவான்கள் செய்துள்ள முதலீடு
பெர்ப்ளக்சிட்டி நிறுவனம் சார்பில் "காமட்" (Comet) என்ற இணைய உலாவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகிளின் ஆதிக்கம்
இன்று வரை இணைய தேடல் உலகில் குரோம் மற்றும் கூகிளின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.
ஆனால், இந்த ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று இணையவாசிகள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர்.

சாய் சுதர்சன்-சுப்மன் கில் அதிரடி: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!
காரணம் என்ன தெரியுமா? இந்தியாவைச் சேர்ந்த ஒரு புத்திசாலி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Intelligence - AI) பயன்படுத்தி கூகிளுக்கு நேரடி போட்டியாக ஒரு புதிய தேடுபொறியை உருவாக்கியிருப்பதுதான்.
பெர்ப்ளக்சிட்டியின் Comet உலாவி
பெர்ப்ளக்சிட்டி (Perplexity) என்ற அதிநவீன ஏஐ நிறுவனத்தை நிறுவியவர் அரவிந்த் ஸ்ரீநிவாஸ் என்ற இந்தியர். இவர் விரைவில் "காமட்" (Comet) என்ற புதுமையான இணைய உலாவியை அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்த உலாவி, கூகிளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். செயற்கை நுண்ணறிவின் ஆற்றலால் இயங்கும் காமட், ஆழமான தகவல்களைத் தேடித் தருவதுடன், பல தானியங்கி வேலைகளையும் செய்யக்கூடியது.
இதனால், இணைய உலாவலின் எதிர்காலம் முற்றிலுமாக மாற வாய்ப்புள்ளது.
பெர்ப்ளக்சிட்டி நிறுவனர் அரவிந்த் ஸ்ரீநிவாசனின் இந்த காமட் பிரவுசர் கனவுக்கு என்விடியா (Nvidia), சாஃப்ட் பேங்க் (SoftBank), அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos), ஓபன் ஏஐ (OpenAI) மற்றும் மெட்டாவின் (Meta) யான் லிகுன் (Yann LeCun) போன்ற டெக் உலகின் ஜாம்பவான்கள் பெரும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்துள்ளனர்.
சமீபத்தில் பெர்ப்ளக்சிட்டி நிறுவனம் சுமார் ₹4,400 கோடி நிதியைத் திரட்டியுள்ளது.
இதன் மூலம் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு விரைவில் 14 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டு, அதாவது சுமார் ₹1.2 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கூகிள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஒரு புதிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |