தளபதியை இழந்து குழம்பி தவிக்கும் ரஷ்ய படைகள்: உக்ரைன் ராணுவத்தின் அதிரடி தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ்க்கு அருகிலுள்ள ப்ரோவரி(Brovary) மாவட்டத்தில் நடைபெற்ற சண்டையில் ரஷ்யாவின் டாங்கி படைப்பிரிவின் தளபதி ஆண்ட்ரி ஜாகரோவ் உக்ரைன் ஆயுதப்படையால் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யாவின் ராணுவ படையெடுப்பு மூன்றாவது வாரத்தை தொட்டிருக்கும் நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேசமயம் நாட்டின் முக்கிய பகுதிகளை இழந்துள்ள உக்ரைனும் தலைநகர் கீவ்வை பாதுகாக்க முழுமூச்சுடன் ரஷ்யாவை எதிர்த்து தடுப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
Бой в ?Броварском районе.
— ⚡️Спутник News АТО ?? (@SputnikATO) March 10, 2022
ВСУ демонстрирует, как должны воевать профессионалы ? pic.twitter.com/QGcrKluO2Y
இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரை கைப்பற்றும் முனைப்பில், கீவ்வின் நகருக்கு அருகாமையில் உள்ள ப்ரோவரி(Brovary) மாவட்டத்திற்குள் நுழைந்த ரஷ்யா ராணுவத்திற்கும் உக்ரைன் ஆயுதப் படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது நடைபெற்றுவரும் இந்த சண்டையில், ரஷ்யாவின் டாங்கி படைப்பிரிவின் தளபதி ஆண்ட்ரி ஜாகரோவ், உக்ரைன் ஆயுதப்படை பிரிவினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இருப்பதாக உக்ரைனில் உள்ள செய்திநிறுவனம் NEXTA தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஆயுதப்படையால் கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி ஆண்ட்ரி ஜாகரோவ் கடந்த 2016ல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் கைகளால் ஆர்டர் "ஆஃப் கரேஜ்"(Order of Courage) என்ற விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.