காபூலில் இருந்து இயக்கப்படும் விமான சேவை முற்றிலும் ரத்து! செய்வதறியாமல் தவிக்கும் அப்பாவி மக்கள்
ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து இயக்கப்படும் விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறி வருகின்றனர்.
இதற்காக மக்கள் விமானநிலையத்தில் குவிந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
இந்நிலையில், தலைநகர் காபூலில் இருந்து இயக்கப்படும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், விமான நிலையத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் காபூலில் இருந்து பயணிகளின் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தயவுசெய்து விமான நிலையத்திற்கு விரைந்து செல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் நாட்டை விட்டு வெளியேற நினைத்த மக்கள், விமானநிலையத்திலே செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.