பட்டத்து இளவரசியைக் காதலிக்கும் சாதாரண குடிமகன்: யார் அந்த அதிர்ஷ்டசாலி?
பிரித்தானியரான ஒரு சாதாரண குடிமகன் பெல்ஜியம் நாட்டு பட்டத்து இளவரசியை, அதாவது, வருங்கால மகாராணியைக் காதலிக்கிறாராம்.
யார் அந்த அதிர்ஷ்டசாலி?
இங்கிலாந்திலுள்ள Rochdale என்னுமிடத்தைச் சேர்ந்தவர் நிக் (Nick Dodd, 20). நிக் ஆக்ஸ்போர்டு பல்கலையில் வரலாறு படிக்கிறாராம். அவருடன், பெல்ஜியம் நாட்டின் பட்டத்து இளவரசியான எலிசபெத்தும் (22) படிக்கிறார்.
படிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக பெல்ஜியம் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிக் தனது நான்காவது வயதிலேயே தன் தந்தையான ஆண்ட்ரூவை (44) இழந்தவர். அதுமுதல், தன் தாயுடன்தான் அவர் வாழ்ந்துவருகிறார்.
யார் இந்த எலிசபெத்?
இளவரசி எலிசபெத், பெல்ஜியம் மன்னரான பிலிப், ராணி மத்தில்டா தம்பதியின் மூத்த மகள் ஆவார்.
மன்னருக்குப்பின் இளவரசி எலிசபெத்தான் பெல்ஜியம் நாட்டுக்கு ராணியாக ஆவார். ஆக, நிக் எலிசபெத்தை திருமணம் செய்துகொள்வாரானால், ஊடகங்கள் எழுதியதுபோலவே, ஒரு சாதாரண குடிமகன், வருங்கால மகாராணியின் கணவராகிவிடுவார்.
பட்டத்து இளவரசியைக் காதலிக்கும் சாதாரண குடிமகன் என பெல்ஜியம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், அவர் வசதியான பரம்பரையில் வந்தவர்தான் என்றும், அவர் இளவரசி எலிசபெத்துக்கு நல்ல ஜோடி என்றும், அவர் ஒரு நல்ல கணவராக இருப்பார் என்றும் நிக்குக்கு புகழாரமும் சூடியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |