பிரித்தானியாவில் நடந்த தீ விபத்து: 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு!
பிசெஸ்டர் பகுதியில் நடந்த தீ விபத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
ஆக்ஸ்போர்ட்ஷயரில் உள்ள முன்னாள் RAF தளமான பிசெஸ்டர் மோஷன் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் பொதுமக்கள் ஒருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தை தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது.
நேற்று மாலை 6:39 மணியளவில் இப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இன்று சோகமான அறிவிப்பை வெளியிட்ட தலைமை தீயணைப்பு அதிகாரி ராப் மெக்டோகல், ஆக்ஸ்போர்ட்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் (OFRS) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், "எங்கள் தீயணைப்பு வீரர்கள் இருவரை இன்று நாங்கள் இழந்து விட்டோம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சி ததும்ப கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆதரவு பெற்று வருவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் துயரத்துடன், பிசெஸ்டர் மோஷன் வெளியிட்ட அறிக்கையில், தீ விபத்தில் "தளத்தின் நெருங்கிய நண்பர்" ஒருவரும் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |