ஹொட்டல் மேஜை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபரால் 4000 பேருக்கு இழப்பீடு
ஹொட்டலில் உள்ள மேஜை மீது ஏறி நபர் ஒருவர் உணவில் சிறுநீர் கழித்ததால் 4000 பேருக்கு இழப்பீடு வழங்குவதாக நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
உணவில் சிறுநீர் கழித்த நபர்
சீனாவின் மிகப்பெரிய உணவகங்களில் ஒன்று ஹைடிலாவ் உணவகம் ஆகும். இந்த உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஷாங்காயில் உள்ள ஹைடிலாவ் கிளை உணவகத்தில் ஒரு நபர் மேசையின் மீது ஏறி உணவின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து உணவகம் சார்பாக மன்னிப்பு கேட்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற அன்று பெறப்பட்ட 4,100 ஓர்டர்களுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுப்பதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த உணவகமானது சீனாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |