எங்கள் போராட்டத்திற்கான வெகுமதி: 45 வயது வரையான பெண்களின் பட்டியல் தயாரிக்கும் தாலிபான்
ஆப்கானிஸ்தானை மொத்தமாக கைப்பற்றியுள்ள நிலையில், 12 வயது சிறுமிகள் முதல் பெண்களின் பட்டியலை தாலிபான்கள் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 வயது முதல் 45 வயதுடைய பெண்களிடம் தாலிபான்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் தாலிபான்களுக்கு கட்டாயத்திருமணம் செய்து வைக்கப்படலாம் என்றே அஞ்சப்படுகிறது. மேலும், இதுவரையான தங்களின் போராட்டங்களுக்கான வெகுமதி இந்தப் பெண்கள் என அவர்கள் பட்டியலை தயாரித்துள்ளார் என உள்ளூர் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
மேலும், காபூலில் ஆசிரியராக பணியாற்றும் 28 வயது பெண் ஒருவர், இனி முதல் பள்ளிக்கு செல்ல கணவரை உடன் அழைத்து செல்ல வேண்டும் எனவும், சட்டத்திற்கு உட்பட்டு ஆடைகள் உடுத்த தவறினாலோ அல்லது தனியாக அவர் தெருவில் காணப்பட்டாலோ மரண தண்டனை உறுதி என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் பணிக்கு திரும்புவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி இதுவரை சுதந்திரமாக செயல்பட்ட பள்ளிகளை தாலிபான்கள் இனி கைவசப்படுத்துவார்கள் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பள்ளி ஆசிரியரின் கணவர் கொஞ்ச காலம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு துருப்புகளுக்காக பணியாற்றிவர் என்பதால், தாலிபான்கள் எப்போது வேண்டுமானாலும் அவரை கைது செய்யலாம் என்றே அஞ்சப்படுகிறது.