ரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட புகார்: வெளிவிவகாரத் துறை அமைச்சர் ராஜினாமா
பெருவில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
தவி விலகிய அமைச்சர் எலிசபெத் தனது டுவிட்டர் பக்கத்தில், இது தவறான செயல் தான். நான் இரண்டாவது டோஸை எடுத்து கொள்ள போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் Pilar Mazzetti கடந்த வாரம் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி Martin Vizcarra கடந்த அக்டோபரிலேயே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்ட நிலையில், சுகாதார அமைச்சர் பதவி விலகினார்.
தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா பெருந்தொற்றால் அதிகமான பாதிப்பை சந்தித்த நாடுகளில் பெருவும் ஒன்று.
இந்த நிலையில் பிப்ரவரி 8 ம் திகதி முதல் பெருவில் கொரோனா தடுப்பு மருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்படு வருகிறது.
ஆனால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் ரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்ததால் பெருவின் வெளிவிவகார அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
பிரித்தானியா மற்றும் தென் ஆபிரிக்காவில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
