இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்: வெளியிட்ட கூட்டறிக்கை
பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள், லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரை குறிவைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முடிவுக்கு வர வேண்டும்
இத்தகைய தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் இரண்டு ஐ.நா அமைதிப்படையினர் காயங்களுடன் தப்பினர்.
அத்துடன் 48 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக அப்பகுதியில் அமைதிப்படையினரின் பிரதான தளத்தை இஸ்ரேல் தாக்கியது. இந்த நிலையில், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர்.
அனைத்து அமைதிப்படையினரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் உடனடியாக போர்நிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |