தடம் புரண்ட குழந்தைகள் ரயில்! பிரித்தானியாவில் கேளிக்கை பூங்காவில் எதிர்பாராத விபத்து
பிரித்தானியாவில் உள்ள கேளிக்கை பூங்காவில் நடந்த எதிர்பாராத விபத்தில் 13 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
தடம் புரண்ட குழந்தைகள் ரயில்
புதன்கிழமை வேல்ஸில் உள்ள போரத்காவ்(Porthcawl) கடற்கரை நகரில் அமைந்துள்ள கோனி பீச் பிளஷர் பார்க்( Coney Beach Pleasure Park) என்ற கேளிக்கை பூங்காவில் குழந்தைகள் ரோலர் கோஸ்டர் தடம் புரண்டதில் 13 குழந்தைகள் மற்றும் பெரியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து குறித்து தகவலறிந்த அவசர சேவைகள் மாலை 6 மணிக்கு முன்னதாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
இந்த விபத்து சம்பவம் குறித்த இணையத்தில் வெளியான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களில், குழந்தைகள் ரயில் ஒரு பகுதி தண்டவாளத்திலிருந்து விலகி இருப்பதும், ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்கள் உதவுவதும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், பூங்கா நிர்வாகம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலில், விபத்துக்குள்ளான குழந்தைகள் ரயில் பூங்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது இல்லை, அது மூன்றாம் தரப்பிற்கு சொந்தமானது. மேலும் எதிர்பாராத விபத்து காரணமாக பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது அறிவித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவருடைய டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |