ஊதியத்தைக் கேட்டதால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்: பொதுமக்கள் கொந்தளிப்பு!
பிரேசிலுக்கு குடியேறிய நபர், தன்னுடைய வேலைக்கான ஊதியத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு நான்கு நபர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Moise Kabagambe என்ற நபர் 2011ஆம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட ஆயுத சண்டைகள் காரணமாக தனது மூன்று சகோதரர்களுடன் பிரேசிலில் குடியேறி Rio de Janeiro பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜனவரி 24ம் திகதி, தனக்கு தரவேண்டிய சம்பள பாக்கி 38 டொலர்களை Moise கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இந்த வாக்குவாதம் முற்றி Moiseயை நான்கு பேர் கொண்ட கும்பல் பேஸ்பால் மட்டையை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.அவர் மயங்கி விழுந்த பின்பும் தாக்கிய கும்பலில் ஒருவர் சுதாரித்து கொண்ட அவரை காப்பாற்ற முற்பட்டுள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கமெராகளில் பதிவாகியிருந்த நிலையில் அதை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை கைது செய்துள்ள பொலிசார், அவர்கள் இருவரும் Moise தாக்கிய கும்பலுடன் இருந்ததாக ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தனது மகன் கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய Moise தாயார் Ivana Lay, தனது மகனின் கழுத்து மற்றும் முதுகு பகுதி உடைக்கப்பட்டிருப்பதாகவும், காங்கோவில் இருந்தால் என் மகன் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று நினைத்து இங்கு வந்தோம், ஆனால் இன்று என் மகன் இறந்துவிட்டான் என கண்ணீருடன் தெரிவித்தார்.