காங்கிரசின் தலைவராக 24 ஆண்டுகளுக்கு பின் நேரு குடும்பம் அல்லாத ஒருவர் தெரிவு!
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பதிவில் இருந்து விலகினார்
ராகுல் காந்தி விலகியதைத் தொடர்ந்து, சோனியாகாந்தி இடைக்கால தலைவராக அப்போது பொறுப்பேற்றார்
இந்தியாவில் காங்கிரஸ் கட்சின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மல்லிகார்ஜுன கார்கே சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸின் முழுநேர தலைவரை தீர்மானிக்கும் தேர்தல் கடந்த 17ஆம் திகதி நடந்தது.
தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே ராகுல்காந்தி விலகிய நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் மொத்தம் 9,915 பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி 7,897 வாக்குகளை பெற்ற மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்றதால் தோல்வியடைந்தார். மேலும் 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவர் ஆவது இதுதான் முதல்முறை ஆகும்.
[