பஞ்சாபை தட்டித் தூக்கிய காங்கிரஸ்.... பஞ்சரான பாஜக: சொதப்பிய ஆம் ஆத்மி கட்சி
இந்தியா கூட்டணியில் இருந்தாலும் பஞ்சாப் மாகாணத்தில் தனித்தே களம் கண்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பாஜகவை மொத்தமாக பஞ்சராக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி முன்னிலை
மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளிலும் அகாலிதளம் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
பஞ்சாபில் ஒரு தொகுதியில் கூட பாஜக முன்னிலையில் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. வெளியான முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 1 தொகுதியை கைப்பற்றியுள்ளதுடன், 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
3 தொகுதிகளில் ஆம் ஆத்மி
2019 தேர்தலில் அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. மேலும் கடந்த முறை அமிர்தசரஸ், ஃபரித்கோட், ஆனந்த்பூர் சாஹிப், ஜலந்தர், கதூர் சாஹிப், லூதியானா, ஃபதேகர் சாஹிப் மற்றும் பாட்டியாலா ஆகிய 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
அகாலிதளம் மற்றும் பாஜக தலா 2 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றது. தற்போது 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 3 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் முன்னிலையில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |